லொள்ளு சபா சேஷூ காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!
லொள்ளு சபா சேஷூ உடல்நலக்குறைவால் காலமானார்.
லொள்ளு சபா சேசு மறைவு
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சேஷூ(60). முதன்முதலாக துள்ளுவதே இளமை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

குறிப்பாக சந்தானத்தோடு இவர் A1 திரைப்படத்தில் நடித்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பல திரைப்படங்களில் இவருடைய காமெடி பல பேரை ரசிக்க வைத்திருக்கிறது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
சமீபத்தில் வெளியான வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சேஷூவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி சேஷூ உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய நடிகர்... யார் இந்த தேசிய விருது பெற்ற நடிகர்னு தெரியுமா? Manithan