தம்பி லாலிபாப் சாப்பிடுகிற பேபி : விஜயை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

Vijay M K Stalin Tamil nadu Premalatha Vijayakanth TVK
By Vinoja Apr 16, 2026 08:37 AM GMT
Report

தமிழக அரசியலில் 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட திமுகவின் வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும்,அரசியலில் நீங்கள் ஒரு 'சின்ன பையன்' மட்டுமே, நிஜமான 'கதாநாயகன்' அல்ல எனவும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை சாடும் வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை பேரணி மேற்கொண்டனர். அதில் பேசும் பேகாதே பிரேதலா விஜயகாந்த் அதனை தெரிவித்துள்ளார்.

தம்பி லாலிபாப் சாப்பிடுகிற பேபி : விஜயை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் | Lollipop Baby Premalatha Vijayakanths Attack Tvk

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் சரியான காய்களை நகர்த்தி, தேமுதிகவை கூட்டணிக்குள் அழைத்து வந்ததன் மூலம் என் அண்ணன் ஸ்டாலின் ஒரு கேம் சேஞ்சராக  மாறியிருக்கிறார் இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும்,"

புதிதாக ஒரு தம்பி வந்திருக்கிறார்... தமிழக அரசியலில் 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட திமுகவின் வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அரசியலில் நீங்கள் ஒரு 'சின்ன பையன்' மட்டுமே, நிஜமான 'கதாநாயகன்' அல்ல முதலில் நிரூபித்து காட்டுங்கள் என தொரிவித்துள்ளார்.