தமிழக சட்டசபைக்கு 3 நாள் விடுமுறை

loksabha 3 days leave mugaram
By Anupriyamkumaresan Aug 20, 2021 04:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழக சட்டசபைக்கு 3 நாள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ந்தேதி கூடிய தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 14-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

16-ந்தேதி முதல் 4 நாட்கள் இந்த இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் உரை வழங்கினார்கள்.

தமிழக சட்டசபைக்கு 3 நாள் விடுமுறை | Loksabha 3 Days Leave For Mugaram

இந்த நிலையில், இன்று முகரம் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை, நாளை மறுநாள் வார விடுமுறை என்பதால் தொடர்ந்து சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறையாகும்.

அடுத்து வரும் 23-ந்தேதி சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.