90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பிரபல நடிகர் லோகேஷ் தற்கொலை... - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொடர்களில் ஒன்றான ‘மர்ம தேசம்’ தொடரில் ராசு என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன்.
இதனையடுத்து, ‘விடாது கருப்பு’ மற்றும் ‘ஜீ பூம்பா’ உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
நடிகர் லோகேஷ் தற்கொலை
இந்நிலையில், லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் மறைவு, ரசிகர்களையும், திரையுலத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லோகேஷ் ராஜேந்திரனுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.