‘’ தோட்டா தெறிக்க தெறிக்க , வேட்டா வெடிக்க வெடிக்க ‘’ : வெறித்தனமாக நடந்த விக்ரம் ஷூட்டிங் , லோகேஷ் போட்ட தெறி ட்வீட்

lokeshkanagaraj vikrammovie
By Irumporai Mar 02, 2022 06:56 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கமல் நடித்து வரும் விகரம் படத்தின் 110 நாட்கள் படபிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் எந்தவொரு படமும் இன்னமும் வெளியாகவில்லை பல வருடங்களாக காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு விருந்தாக போட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காத்திருக்கிறார்.

விக்ரம் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறும் நிலையில் அதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

துப்பாக்கியில் இருந்து தோட்டா தெறிக்க தெறிக்க ஒரு படப்பிடிப்பு நிறைவு வீடியோவை ஷேர் செய்து இந்த அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.அந்த துப்பாக்கியை வெறித்தனமாக பகத் ஃபாசில் சுடுவது போலவும் அருகே லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழுவினர் உள்ளனர். நடிகர் நரேனும் உள்ளார்.

கைதி, மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் 112 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. '

மேலும், விக்ரம் படத்தின் இந்தி ரீமேக் வெர்ஷனும் 60 கோடிக்கு மேல் வியாபாரம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.