LCUவின் கடைசி படம் இதுதான் - ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
LCUவின் கடைசி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.
LCU கடைசி படம்
தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் LCUவின் கடைசி படம் குறித்து பேசி உள்ளார்.

இதில் பேசிய அவர், "அடுத்தது கைதி-2, ரோலக்ஸ் திரைப்படங்களை இயக்க உள்ளேன். இதன் பின் விக்ரம்-2 படத்துடன் LCU முடிந்து விடும்" என பேசியுள்ளார். மேலும், "விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக கூறி உள்ளார். விஜய் தொடர்ந்து நடித்தால் லியோ-2 எடுக்கலாம்" என தெரிவித்தார்.
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil