அந்த காதல் பார்வை; பிரபல நடிகையுடன் இணையும் லோகேஷ் கனகராஜ் - வைரல் ஃபோட்டோ!
லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது.
இசை ஆல்பம்
துபாயில் நடந்த விருது விழா ஒன்றில், சிறந்த பாடகருக்கான விருதினை கமல்ஹாசனுக்கு, ஸ்ருதிஹாசன் வழங்கினார். அப்போது மேடையில், கமல்ஹாசன், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன்

இணைந்து புதிய இசை படைப்பு ஒன்றில் பணியாற்றவிருப்பதாக தகவல் ஒன்றை பகிர்ந்தார். தற்போது வைரலாகி வரும் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் இணைந்துள்ள புகைப்படம், ஓர் இசை ஆல்பத்துக்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர். ஸ்ருதிஹாசனே இதில் பாடல் எழுதியுள்ளார்.
வைரல் ஃபோட்டோ
இதில், லோகேஷ் கனகராஜ் நடித்தால் இன்னும் புதுப்பரிமாணம் கிடைக்கும் என நினைத்து அவருடம் கேட்டுள்ளார். உடனே அந்த பாடலைக் கேட்ட லோகேஷ் நடிக்க சம்மதித்து படப்பிடிப்புக்கும் தயாரானார்.

இந்த ஆல்பத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெறுகிறது. 'இனிமேல் டெல்லுலு இஸ் த நியூ சொல்லுலு'வின் என இதன் வரிகளை அறிவித்துள்ளனர். தொடர்ந்து, காதல் தினத்தன்று இந்த ஆல்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil