மக்களவைத் தேர்தல்(2024): 31 முதல் 39+1 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!

Tamil nadu Puducherry Lok Sabha Election 2024
By Jiyath Apr 17, 2024 10:07 AM GMT
Report

மக்களவைத் தேர்தல்

வரும் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. அதனை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிசி தமிழின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பின் படி, வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது

மக்களவைத் தேர்தல்(2024): 31 முதல் 39+1 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு! | Lok Sabha Election 2024 Opinion Poll Ibc Tamil

31-வது மக்களவை தொகுதியான சிவகங்கையில், 

காங்கிரஸ் - கார்த்தி சிதம்பரம்

அதிமுக - சேவியர் தாஸ்

பாஜக - தேவநாதன் யாதவ்

நாதக - எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. 


32வது மக்களவை தொகுதியான மதுரையில்,

கம்யூனிஸ்ட் - சு.வெங்கடேஷன்

அதிமுக - சரவணன்

பாஜக - ராம ஸ்ரீனிவாசன்

நாதக - சத்யா தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இதில், கம்யூனிஸ்ட் வேட்பாளரான சு.வெங்கடேஷன் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.


33-வது மக்களவை தொகுதியான தேனியில்,

திமுக - தங்க தமிழ் செல்வன்

அதிமுக - நாராயணசாமி

அமமுக - டிடிவி தினகரன்

நாதக - மதன் ஜெயபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


34-வது மக்களவை தொகுதியான விருதுநகரில்,

காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர்

தேமுதிக - விஜயபிரபாகரன்

பாஜக - ராதிகா சரத்குமார்

நாதக - கௌஷிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.


35-வது மக்களவை தொகுதியான ராமநாதபுரத்தில்,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - கனி கே.நவாஸ்,

அதிமுக - ஜெயபெருமாள்

சுயேட்ச்சை - ஓ.பன்னீர்செல்வம்

நாதக - சந்திரபிரபா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கனி கே.நவாஸ் மற்றும் அதிமுகவின் ஜெயபெருமாள் ஆகியோருக்கு இடையே கடும் இழுபறி நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


36-வது மக்களவை தொகுதியான தூத்துக்குடியில்,

திமுக - கனிமொழி

அதிமுக - சிவசாமி வேலுமணி

தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன்

நாதக - ரெவீனாரூத் ஜென் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.  


37-வது மக்களவை தொகுதியான தென்காசியில்,

திமுக - ராணி ஸ்ரீகுமார்,

புதிய தமிழகம் - டாக்டர் கிருஷ்ணசாமி

பாஜக - ஜான் பாண்டியன்

நாதக - இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.  


38-வது மக்களவை தொகுதியான திருநெல்வேலியில்,

காங்கிரஸ் - ராபர்ட் ப்ரூஸ்

அதிமுக - ஜான்சிராணி

பாஜக நயினார் நாகேந்திரன்

நாதக - சத்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.


39-வது மக்களவை தொகுதியான கன்னியாகுமரியில்,

காங்கிரஸ் - விஜய் வசந்த்

அதிமுக - பசிலியன் நசரேத்

பாஜக - பொன் ராதாகிருஷ்ணன்

நாதக - மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மக்களவை தொகுதியில்,

காங்கிரஸ் - வைத்திலிங்கம்

அதிமுக - தமிழ்வேந்தன்

பாஜக - நமச்சிவாயம்

நாதக - மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.