மக்களவைத் தேர்தல்(2024): 21 முதல் 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!
வரும் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. அதனை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிசி தமிழின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பின் படி, வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
21வது மக்களவை தொகுதியான பொள்ளாச்சி,
திமுக - ஈஸ்வரசுவாமி
அதிமுக - கார்த்திகேயன்
பாஜக - வசந்தராஜன்
நாதக - சுரேஷ் குமார்
திமுக வேட்பாளரான ஈஸ்வரசுவாமிக்கும் , அதிமுக வேட்பாளரான கார்த்திகேயனுக்கும் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
22வது மக்களவை தொகுதியான திண்டுக்கல்,
கம்யூனிஸ்ட் - சச்சிதானந்தம்
எஸ்.டி.பி.ஐ(அதிமுக கூட்டணி) - முகமத் முபாரக்
பாமக(பாஜக கூட்டணி) - திலகபாமா
நாம் தமிழர் கட்சி - கயிலை ராஜன்
திமுக கூட்டணியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
23வது மக்களவை தொகுதியான கரூர்,
காங்கிரஸ்(திமுக கூட்டணி) - ஜோதிமணி
அதிமுக - தங்கவேல்
பாஜக - செந்தில்நாதன்
நாம் தமிழர் - கருப்பையா
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரான ஜோதிமணி வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
24வது மக்களவை தொகுதியான திருச்சி,
மதிமுக - துரை வைகோ
அதிமுக - கருப்பையா
அமமுக - செந்தில்நாதன்
நாதக - ஜல்லிக்கட்டு ராஜேஷ்
மதிமுக வேட்பாளரான துரை வைகோ வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
25வது மக்களவை தொகுதியான பெரம்பலூர்,
திமுக - அருண் நேரு
அதிமுக - சந்திரமோகன்
பாஜக - பாரிவேந்தர்
நாதக - தேன்மொழி
திமுக வேட்பாளரான அருண் நேரு வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
26-வது மக்களவை தொகுதியான கடலூரில்,
காங்கிரஸ் - விஷ்ணு பிரசாத்
தேமுதிக - சிவக்கொழுந்து
பாமக - தங்கர்பச்சான்
நாதக - மணிவாசகன்
இதில், தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
27-வது மக்களவை தொகுதியான சிதம்பரத்தில்,
விசிக - தொல். திருமாவளவன்
அதிமுக - சந்திரகாசன்
பாஜக - கார்த்தியாயினி
நாதக - ஜான்சி ராணி
இதில், திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
28-வது மக்களவை தொகுதியான மயிலாடுதுறையில்,
காங்கிரஸ் - சுதா
அதிமுக - பாபு
பாமக - மா.கா. ஸ்டாலின்
நாதக - காளியம்மாள்
இதில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
29வது மக்களவை தொகுதியான நாகப்பட்டினம்,
கம்யூனிஸ்ட்(திமுக கூட்டணி) - செல்வராஜ்
அதிமுக - சுர்ஜித் சங்கர்
பாஜக - SGM ரமேஷ்
நாம் தமிழர் - கார்த்திகா
திமுக கூட்டணியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
30வது மக்களவை தொகுதியான தஞ்சாவூர்,
திமுக - முரசொலி
தேமுதிக - சிவநேசன்
பாஜக - முருகானந்தம்
நாதக - ஹுமாயூன் கபீர்
திமுக வேட்பாளரான முரசொலி வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.