பாஜக என்ட்ரி; அதிமுக எத்தனை இடங்களில் வெல்லும்? சுவாரஸ்ய கருத்து கணிப்பு முடிவு!
தமிழ்நாட்டில் அதிமுக எத்தனை இடங்களை வெல்லும் என கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க 21 இடங்களைப் பிடிக்கும். அதாவது திமுகவின் சின்னம் மட்டும் 21 இடங்கள் வரை வெல்லும் என்று பிரபல செய்து நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி, கணிக்கப்பட்டு உள்ளது.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 5 முதல் 7 இடங்களைப் பிடிக்கும். பாஜக இரண்டு முதல் ஆறு இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக ஒன்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாக் தகவல்
திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடும் விசிக போன்ற கட்சிகளோ, அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் நிற்கும் தேமுதிக போன்ற கட்சிகளோ நான்கிலிருந்து ஐந்து இடங்களைப் பெறலாம்.
கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் போன்ற மொத்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
மொத்த இடங்கள்: 543
மெஜாரிட்டி 272 - பாஜக: 329-359 - காங்கிரஸ்: 27-47 - YSRCP: 21-22 - திமுக: 24-28 - டிஎம்சி: 17-21 - BJD: 10-12 - ஆம் ஆத்மி: 5-7 - மற்றவை: 72-92