ரஜினியின் நெருங்கிய நண்பருக்கு புதிய சின்னம் அறிவிப்பு- எதிர்பாராத ட்விஸ்ட்
ரஜினியின் நெருங்கிய நண்பரான அர்ஜூன மூர்த்தியின் கட்சிக்கு ரோபோ சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தொடங்குவதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜூன மூர்த்தி சமீபத்தில் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் (இமமுக) என்கிற கட்சியை தொடங்கியுள்ளார்.
ரஜினி கட்சி தொடங்கியிருந்தால் இந்த நேரத்திற்கு மிகவும் பிஸியான நபராக அர்ஜூன மூர்த்திதான் இருந்திருப்பார். ஆனால் ரஜினி பின்வாங்கியதால் இவரது வேறு பாதையில் பயணிக்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
கட்சி தொடங்கப்பட்டதை அடுத்து அர்ஜுனமூர்த்திக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தலைமை தேர்தல் ஆணையம் அர்ஜுன மூர்த்தியின் இமமுக கட்சிக்கு 234 தொகுதிகளிலும் ரோபோ சின்னத்தை கொடுத்துள்ளது.
ரஜினி நடித்த ' எந்திரன், 2.0' ஆகிய திரைப்படங்களின் பிரதான கதாபாத்திரமான ரோபோ தனது கட்சிக்கு சின்னமாக கிடைத்திருப்பதால் அர்ஜுனமூர்த்தி மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.