'தண்ணீர் கூட இல்லை' - விமான நிலைய ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்தனர் - நடிகை ஆவேசம்!
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, விமான நிலையம் ஒன்றில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைத்ததாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ராதிகா ஆப்தே
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது "இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். 10.15 மணியைக் கடந்தும் விமானம் புறப்படவில்லை.

ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைத்தனர். பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர்.
பயணத்துக்கு நன்றி
எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்தனர் பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை.

நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர். குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் சம்பவம் நடைபெற்ற விமான நிலையத்தின் பெயரையோ, மற்ற தகவல்களையோ ராதிகா ஆப்தே வெளிப்படுத்தவில்லை.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil