ஊரடங்கு இல்லை ஆனால் புதிய கட்டுப்பாடுகள் உண்டு: கோ. பிரகாஷ் தகவல்
கடந்தாண்டு நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் நாட்டில் கொரோனா பரவல்அதிகமானதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயம்பேடு சந்தைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதிகொடுக்கப்பட்டுள்ளதாகவும். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
மேலும், இன்று,புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.