தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் என்னென்ன?

Corona cmstalin lockdowntamilnadu TNLockdown
By Irumporai Feb 12, 2022 10:22 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்

.இந்த நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன், தமிழகம் முழுவதும் மார்ச் 2-ஆம் தேதி அவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சில புதிய தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை  விதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதி

பொருட்காட்சிகளை நடத்த அனுமதி  

திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 200 பேருக்கு அனுமதி

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு அனுமதி