தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

tngovt tnlockdown tnfullllockdown ஊரடங்கு நீட்டிப்பு
By Petchi Avudaiappan Jan 10, 2022 03:46 PM GMT
Report

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதோடு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளோடு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

  • ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. 
  • பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி பேருந்துகளில் 75% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி.
  • ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் 

தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு | Lockdown Restriction Extended

  • ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கத்தின் போது பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை இயங்காது
  • திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் அனுமதி 
  • ஜனவரி 31 ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
  • உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி
  • மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி
  • 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்.
  • அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
  • அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு
  • திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதி
  • ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி
  • இரவு நேரம் விமானம், ரயிலில் பயணம் செய்யவேண்டிய தேவை இருப்பவர்கள் பயணச் சீட்டுடன் வாகனத்தில் பயணிக்கலாம்
  •  அத்தியாவசிய தேவைகளான பால், பத்திரிக்கை, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த இதர வசதிகள் அனைத்து இரவு நேர ஊரடங்கின் போது செயல்படும்.
  • பெட்ரோல் பங்க்குள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி.