இன்று முதல் அமலானது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு - 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலானது. தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் அளிக்கப்படாமல் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தளர்வுகள்:
தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி
அழகு நிலையங்கள் , சலூன்கள் குளிர்சாதன வசதி இயலாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பூங்காக்கள் விளையாட்டு பூங்காகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் செயல்படலாம்
வேளாண் உபகரணங்கள் பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்
கண் கண்ணாடி விற்பனை மற்றும் நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் .
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் .
கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படலாம்.
தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டும் நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம்.
பள்ளி, கல்லூரி ,பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை நிர்வாக பணிகள் செய்ய அனுமதிக்கப்படும்.
வீட்டுவசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்
இ-பதிவு மற்றும் தொழிற்சாலை அடையாள அட்டையுடன் இருசக்கர வாகனங்களில் ஊழியர்கள் வேலைக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.