கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமல் - எதற்கெல்லாம் அனுமதி!
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலானது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கூடுதல் தளர்வுகளுடன் 19-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மேலும், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி. மேலும், புதுச்சேரிக்கான பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள
வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.