இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்?

lockdown relaxation
By Anupriyamkumaresan Jun 28, 2021 04:29 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

தமிழ்நாட்டில் இன்று காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தன. 

இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்? | Lockdown Relaxation Today Onwards

இன்று முதல் ஜூலை 5ஆம் தேதி காலை வரை இந்த தளர்வுகள், கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். வகை 1 - மாவட்டங்கள் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் என 11 மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

வகை 2 - மாவட்டங்கள் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் என 23 மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

வகை 3 - மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

வகை 1, 2ல் உள்ள மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை கூடுதலாக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வகை 2ல் உள்ள 23 மாவட்டத்திற்குள்ளும், வெளியேயும் பொது பேருந்து போக்குவரத்து, குளிர் சாதன வசதி இல்லாமல் 50% இருக்கைகளுடன் பயணிகள் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வகை 2 மாவட்டங்களில் மட்டும் துணிக் கடைகள், நகைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி செயல்பட அனுமதி

இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்? | Lockdown Relaxation Today Onwards

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வுகள்! மாவட்டத்திற்குள்ளும் வெளியேயும் பொது பேருந்து போக்குவரத்து, குளிர் சாதன வசதி இல்லாமலும் 50% இருக்கைகளுடன் பயணிகள் பயணிக்க அனுமதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் அனைத்து தனியார் நிறுவனங்கள், 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்? | Lockdown Relaxation Today Onwards

அனைத்துக் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

அனைத்து நகைக்கடைகள்காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்க அனுமதி