இனி வரும் நாட்களில் தளர்வா - கட்டுப்பாடா? - முதலமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கலாமா அல்லது கட்டுப்பாடுகள் அளிக்கலாமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, கடந்த மே மாதம் மூலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர், ‘’கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது; தளர்வுகளை அளித்தால் உடனே மக்கள் கூடிவிடுகின்றனர்.
அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர். இதுபோன்ற நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வார ஊரடங்கு நாளை மறு நாளுடன் முடிவடையவுள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.