அடுத்த வார ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன? நாளை முதல்வர் ஆலோசனை! பேருந்துகள் செல்ல அனுமதியா?
lockdown
cm
discuss
By Anupriyamkumaresan
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு மருத்துவர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், நாளை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதில் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.