ஊரடங்கில் மேலும் தளர்வா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

today lockdown cm mk stalin discuss
By Anupriyamkumaresan Jun 10, 2021 04:01 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த வாரம் முன்பு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கில் மேலும் தளர்வா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை! | Lockdown Relaxation Cm Discusss Today

இந்த நிலையில் தொற்று சற்று குறைந்த நிலையில் கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதில் காய்கறி கடைகள், பூ கடைகள், இறைச்சிகடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் மேலும் தளர்வா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை! | Lockdown Relaxation Cm Discusss Today

இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், தலைமை செயலர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.