தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கில் தளர்வா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

lockdown relaxation cm discuss
By Anupriyamkumaresan Jun 04, 2021 03:37 AM GMT
Report

தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனாவின் 2-ம் அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனால் பாதிப்பு குறையாத பட்சத்தில் மே 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த முழு ஊரடங்கு 7-ம் தேதி வரை நீட்டிக்கபப்ட்டது.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கில் தளர்வா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை | Lockdown Relaxation After 7 Cm Discuss

இந்த ஊரடங்கானது வரும் 7-ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, தளார்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்து இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஊரடங்கை மேலும் நீட்டித்து கொண்டே போக முடியாது என முதலமைச்சர் கருத்து தெரிவித்த நிலையில், ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.