ஊரடங்கால் தவிப்பு..! ராமேஸ்வரத்தில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..!

extend rameswaram currentbill date public cry
By Anupriyamkumaresan May 26, 2021 08:54 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ராமேஸ்வரத்தில், ஊரடங்குகாலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் ஏழை எளிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தைச் செலுத்த 3 மாத கால அவகாசம் அளிக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும்,, நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஏராளமான பொதுமக்கள் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர். இதனால் தமிழக அரசு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    


ஊரடங்கால் தவிப்பு..! ராமேஸ்வரத்தில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..! | Lockdown Noslaary Public Cry Currentbilldateextend