மீண்டும் லாக்டவுன் வருமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர் ..

lockdown coronavirus nirmalasitharaman
By Irumporai Apr 14, 2021 11:13 AM GMT
Report

கடந்த ஆண்டு நடந்தது போல இந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கியிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

  கொரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் 5 அம்ச திட்டங்கள் பற்றி உலகவங்கி குழு தலைவரிடம் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.

அதன்படி,டெஸ்ட், நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி திட்டம், நோயை கட்டுப்பாட்டுக்கான நடத்தை விதிமுறைகள் போன்ற 5 அம்ச திட்டங்கள் பற்றி விளக்கிய நிர்மலதா சீதாராமன், இதன் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் உலகவங்கி குழு தலைவரிடம் எடுத்துரைத்தார் இதன் மூலம் கொரோனா தொர்றை கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

மேலும், உலக வங்கியிடம் நடத்திய ஆலோசனையில் நிதித் துறைகளில் மறு சீரமைப்பு, நீர் மேலாண்மை, சுகாதார மேம்பாடு, சிவில் சர்வீஸ் தொடர்பாகவும், எல்இடி பல்புகளை அதிகமாக பயன்படுத்துதல், எரி பொருட்களில் எத்தனால் கலப்பதை அதிகப்படுத்துவது, பேட்டரி வாகனங்களை அதிகரிப்பது போன்றவை குறித்தும் இருதரப்பு விவாதங்கள் நடந்துள்ளன.