ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமல்! என்னென்ன தெரியுமா?

restrictions today lockdown starts extend
By Anupriyamkumaresan Aug 08, 2021 07:29 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமல்! என்னென்ன தெரியுமா? | Lockdown Extends Restrictions Today Starts

மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும் போதே கட்டுக்குள் கொண்டு வருமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் படி கோவை, சென்னை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தேநீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களும் காலை 6 மணி முதல் 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமல்! என்னென்ன தெரியுமா? | Lockdown Extends Restrictions Today Starts

சேலம் மாவட்டத்தில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையில் செயல்பட அனுமதி இல்லை. பூ, பழம், காய்கறி உள்ளிட்ட கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. வாரச் சந்தைகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது.