1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு? முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று 12.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
அக்.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாலும் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக்கோருவது பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.