ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை! என்னென்ன தெரியுமா?

lockdown relaxation
By Anupriyamkumaresan Jul 16, 2021 03:09 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து தளர்வுகள் அளித்து வருகிறது.

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை! என்னென்ன தெரியுமா? | Lockdown Extends Relaxation Cm Discuss

தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் வருகின்ற 18ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஊரடங்கு தளர்வுகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நேரம் உயர்த்தப்படும் மற்றும் திருமணம் இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை! என்னென்ன தெரியுமா? | Lockdown Extends Relaxation Cm Discuss

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், மருத்துவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.