தமிழ்நாட்டில் ஒரு வாரம் தளர்வுடகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு, டாஸ்மாக் திறப்பு - வேறு எதற்கெல்லாம் அனுமதி?

Corona Lockdown Relaxation Tasmac
By mohanelango Jun 11, 2021 01:10 PM GMT
Report

தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்போன் மற்றும் மின்னனு சாதன கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேளாண் உபகரணங்கள் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகளுக்கும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு மட்டும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டும் அனுமதி. வாடகை வாகனங்கள் மட்டும் டாக்ஸிகள் இ-பதிவுடன் இயங்க அனுமதி.

ஏற்றுமதி, இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் 25% ஊழியர்களுடனும் தொழிற்சாலைகள் 33% ஊழியர்களுடனும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.