ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

puducherry lockdownextended
By Petchi Avudaiappan Aug 15, 2021 05:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2வது அலை பரவலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 மணி வரை திறக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.