மே 2ம் தேதி முழு ஊரடங்கு கிடையாது:தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

lockdown election result may
By Praveen Apr 18, 2021 08:58 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை எண்ணப்படும் தினமான மே 2ம் தேதி முழு ஊரடங்கு கிடையாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இதனிடையே தமிழகத்தின் தினசரி இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதனால் சுகாதாரத்துறை உள்ளிட்ட நிபுணர்களுடன் கொரோனா பரவல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அன்றைய தினம் முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.