டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு -சொந்த ஊரை நோக்கி படையெடுக்கும் மக்கள்

covid19 india corona lockdown lockdown2021
By Irumporai Apr 19, 2021 07:38 PM GMT
Report

கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால், வரும், 26ம் தேதி காலை, 5:00 மணி வரையில், ஆறு நாட்களுக்கான முழு ஊரடங்கு, டில்லியில் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு உள்ளது. தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் இங்கு வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் போது: நம் சுகாதார கட்டமைப்பை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆனால் நிலைமை முழுமையாக மோசமடையவில்லை. தற்போது, மருந்துகள், ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல், ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த ஆறு நாள் ஊரடங்கின்போது, உரிய வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் பொது போக்குவரத்து, கட்டுப்பாட்டுடன் இயக்கப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் வெளியேற வேண்டாம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என அரவிந்த்கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அதேசமயம் பல மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் ஊரடங்கு அச்சத்தினால் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர்.

இதனால் டெல்லியில் உள்ள ஆனந்த்விகார் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.