'ஊரடங்கால் ஏற்படும் இழப்பு ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும்': ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு
ஊரடங்கு சமயத்தில் ரூ.1.5 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பீடு ஏற்படுத்தும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது, கிட்டத்தட்ட, 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'வின் பொருளாதார பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது, ஊரடங்குகள் காரணமாக, மொத்த இழப்பு, 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதில், 80 சதவீத இழப்பு மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருக்கும். மகாராஷ்ட்ராவில் மட்டும், 54 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, எஸ்.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார அறிக்கை இவ்வாறு தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, முந்தைய கணிப்பிலிருந்து குறைத்து அறிவித்துஉள்ளது, எஸ்.பி.ஐ.,இதற்கு முன், வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 11 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, 10.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.