சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தடைகளை பிறப்பித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டில் இல்லாத அளவுக்கு பதிவாகி வருகிறது. கொரோனா முதல் அலையின் போது தினசரி பாதிப்பு 7,000ஐ தாண்டவில்லை.
ஆனால் தற்போது இரண்டாவது அலையின் போது ஒரு நாள் பாதிப்பு 8,000ஐ நெருங்கியுள்ளது. அதே போல் சென்னையில் தினசரி பாதிப்பு 2,500ஐ தாண்டியுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதனால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மாலை 3 மணி வரை பொது மக்கள் கூடுவது, மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த தடைகளை பிறப்பித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.