மறுபடியும் லாக்டவுனா ? நாளை முதல்வர் ஆலோசனை!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
ஆகவே சென்னையில் தி.நகர் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அதே போல கோவை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டன்களிலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடு கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.