மடப்புரம் அஜித்குமார் மரணம்: தாயின் கண்கலங்கவைக்கும் பேட்டி
சிறையில் காவலர்களின் சித்ரவதையால் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் வழக்கை நேற்று நீதிபதிகள் விசாரித்த நிலையில், இன்று அவரது தாய் பேட்டியில் கூறியுள்ள விடயம் அதி்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலாளி அஜித்குமார்
மதுரை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியான அஜித் குமார் கடந்த 2025ம் ஆண்டு ஜுன் 27ம் தேதி நகை திருட்டு புகாரில் தனிப்படை காவலர்கள் விசாரித்த நிலையில், மறுநாள் ஜுன் 28ம் தேதி காலமானார்.
நகை திருட்டு போனதாக புகார் அளித்தவர் திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா ஆவார். ஆனால் இவர் கொடுத்த வழக்கு பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

குறித்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, நகை திருட்டு போனதாக புகார் கொடுத்தது உண்மையா? அவரை கைது செய்தீர்களா? என்றெல்லாம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் குறித்த வழக்கை 17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ள நிலையில், இன்று அவரது தாய் கொடுத்துள்ள பேட்டி அனைவரது மனதையும் கலங்க வைத்துள்ளது.

தாய் கொடுத்த பேட்டி
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் தாய், தனது மகனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் அடித்து கொலை செய்துள்ளனர். அவன் பயங்கரவாதியா? ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு இரக்க குணம் உள்ளது... ஐந்தறிவு படைத்த அரக்கர்களாக இருந்து எனது மகனை போலிஸ் அதிகாரிகள் இவ்வாறு அடித்து கொலை செய்துள்ளனர்.
தனது மகன் திருடவில்லை என்பது சிபிஐ விசாரணையில் வெளிவந்தது. தனது மகன் திருடியதை யார் பார்த்தது? நாங்கள் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும், தவறானவர்களாக எனது பிள்ளையை வளர்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
யார் கூறி தனது மகனை இவ்வாறு தாக்கினார்கள்? அந்த ஐந்து பேரையும் விடக்கூடாது.... கோவிலுக்குள் வைத்தே தனது மகனை அடித்துள்ளனர். காயம்பட்டவனை அடித்தவர்கள் காப்பாற்றி இருக்க வேண்டும். மேலும் தனது மகன் மீது பொய் திருட்டு புகார் அளித்த நிகிதாவையும் உடனே கைது செய்து பொய் புகார் கொடுத்தது ஏன் என்று விசாரிக்க வேண்டும்.
இன்னும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து, தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அஜித்தின் அம்மா கூறியுள்ளார்.