அஜித்குமார் கொலை வழக்கு: மனசு பதறுவதாக கூறிய நீதிபதி

By Manchu Feb 04, 2026 03:31 PM GMT
Report

சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த காவலாளர் அஜித்குமாரின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.

கோவில் காவலாளி அஜித்குமார்

மதுரை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியான அஜித் குமார் கடந்த 2025ம் ஆண்டு ஜுன் 27ம் தேதி நகை திருட்டு புகாரில் தனிப்படை காவலர்கள் விசாரித்த நிலையில், மறுநாள் ஜுன் 28ம் தேதி காலமானார்.

குறித்த வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்களால் நிரூபிக்க முடியுமா? தவெக செங்கோட்டையன் ஆவேசம்

உங்களால் நிரூபிக்க முடியுமா? தவெக செங்கோட்டையன் ஆவேசம்

இந்நிலையில் அஜித்குமாரின் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

சிபிஐ தரப்பில் அஜித்தின் மரணம் ஒரு காவல் மரணம் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 10 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

அஜித்குமார் கொலை வழக்கு: மனசு பதறுவதாக கூறிய நீதிபதி | Lock Up Death Ajith Kumar Case Judge Slams Police

ஆவேசத்தில் நீதிபதி

இந்நிலையில் நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு சிபிஐ தரப்பு அது உண்மை இல்லை என்றும் அறிக்கையே தயாராகி வருகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

பின்பு நீதிபதி ஒன்றிமில்லாத விடயத்திற்கு ஒருவரை இப்படி அடித்து கொலை செய்துவிட்டனர்... புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

அஜித்குமார் கொலை வழக்கு: மனசு பதறுவதாக கூறிய நீதிபதி | Lock Up Death Ajith Kumar Case Judge Slams Police

அதுமட்டுமின்றி இதற்கு முன்விரோதம் ஏதும் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சிபிஐ முன்விரோதம் எதுவும் இல்லை என்றும் டிஎஸ்பி விசாரிக்க கூறியதால் இவ்வாறு நடந்ததாக கூறியுள்ளனர்.

பின்பு மிகவும் மனம் கஷ்டப்பட்ட நீதிபதி யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும்... மனது பதறுகிற்து... எந்தவொரு காரணம் இல்லாமல் இப்படி அடித்துள்ளனர்... காவல்துறையினர் பாடம் புகட்டுவோம் என்று கூறி வழக்கினை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.