3000 சதுரடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு

lock store above 3000sq gov
By Praveen Apr 27, 2021 04:21 PM GMT
Report

தமிழகத்தில் தற்போது 3000 சதுரடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஒரேநாளில் 15,830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 11.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும்,13,728 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நேற்றைவிட இன்று தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஓரளவு குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இதற்கிடையே, 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியிருக்கிறார். சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3000 சதுரடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு | Lock Store 3000Sqft Government Order