வழிநெடுகிலும் மலர் தூவி மரியாதை செய்த மக்கள்: நெகிழ வைக்கும் வீடியோ

By Fathima Dec 09, 2021 09:38 AM GMT
Report

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட போது, மக்கள் மலர் தூவி தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் நேற்று பலியாகினர்.

இவர்களின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது மேட்டுப்பாளையம் அருகே வழிநெடுகிலும் நின்றிருந்த மக்கள், மலர் தூவி தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.