2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 73.27% வாக்குப்பதிவு
தமிழக ஊரக உள்ளாட்சி 2ஆம் கட்டத் தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தலில் 73.27% வாக்குப்பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.