நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்..!

Narendra Modi
By Thahir Apr 30, 2022 07:50 AM GMT
Report

டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள்,தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். நாடு முழுவதும் உள்ள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் மற்றும் முதலமைச்சர்கள் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,நீதித்துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்,நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருவதாக கூறினார்.

மேலும் அவர்,நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்.இதன் மூலம் சாமானிய குடிமக்களுக்கு நீதித்துறை மீத நம்பிக்கையை அதிகரிக்கும் என தெரிவித்தார்.