ஜனவரி 2ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tiruchirappalli
By Thahir Dec 17, 2022 04:58 PM GMT
Report

வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ( 02.01.2023) திங்கள் கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

local-holiday-in-trichy-january-2nd

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

ஆயினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.01.2023 சனிக்கிழமை அன்று வேலை நாள் என அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தகவல்.