சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ள நிலையில் அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடையாத நிலையில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் -11, செங்கல்பட்டு -14, ராணிப்பேட்டை -9, விழுப்புரம் - 24, தென்காசி-12, வாலாஜாபாத் -15, உத்திரமேரூர் -17, ஸ்ரீபெரும்புதூரில் -12, குன்றத்தூர் -18 ஆகிய பதவிகளில் போட்டியிடுபவர்களுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது .
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! #AIADMK ? pic.twitter.com/12F7Viig0k
— அஇஅதிமுக (@ADMKofficial) September 20, 2021