வடிவேலு பாணியில் அனைத்து சின்னத்திலும் ஓட்டு போட்ட நபர்: சுவாரசிய சம்பவம்

1 week ago

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் வாக்கு எண்ணும் போது சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன.

அதாவது, வெள்ளையாம்பட்டு ஊராட்சியில் 16வது வார்டில், பதிவான வாக்கு எண்ணிக்கையில் போது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு வாக்களித்த நபர் ஒருவர் வாக்குச்சீட்டில் இருந்த ஐந்து சின்னங்களில் 4 சின்னங்களுக்கு ஓட்டு போட்டுள்ளார்.

இந்த வாக்குசீட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது, இதேபோன்று ஒரு சில இடங்களில் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்