விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
அதில், 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் கருப்படித்தட்டை காந்திநகர் 1 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நகர செயலாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 65 வாக்குகள் பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.