உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது யார்? இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள்

By Fathima Oct 12, 2021 12:30 AM GMT
Report

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

9 மாவட்ட குழு தலைவர்கள், 74 ஒன்றிய தலைவர்கள், 2901 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

முதல் கட்ட தேர்தலில் 77. 43 விழுக்காடும் , இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. 

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

இந்நிலையில் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.