திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணிநேர நிலவரப்படி 37.38 சதவிகித வாக்குகள் பதிவு
திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 37.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் 24 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள் மற்றும் 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் என மொத்தம் 24 பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறவிருந்தது.
இதனிடையே, 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதால், எஞ்சிய மொத்தமுள்ள 14 பதவியிடங்களுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் 10,691 பேர், பெண்கள் 16,057 பேர் என மொத்தம் 26,748 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆண்கள் 4,016 பேர் (37.56% ), பெண்கள் 4,113 பேர் (37.20%) என மொத்தம் 8,129 பேர் வாக்களித்துள்ளனர். இது 37.38 சதவீதம் ஆகும்.