ஊரக உள்ளாட்சி தேர்தல்: எந்த பதவிக்கு எந்த நிற வாக்கு சீட்டு?

By Fathima Oct 06, 2021 04:37 AM GMT
Report

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06.10.2021) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இந்த தேர்தலுக்காக 17,130 போலீஸாரும், 3,405 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடைசி ஒரு மணி நேரம் (மாலை 5.00 - 6.00) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளோர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

எந்த பதவிக்கு எந்த நிற சீட்டு?

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம்.
கிராம ஊராட்சி மன்ற தலைவர் - இளஞ்சிவப்பு நிறம்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) - பச்சை நிறம். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) - மஞ்சள் நிறம்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் போட்டியிடும் இடத்தில் 2-வார்டு வரும் பகுதிகளில் மட்டும் லேசான நீலநிற சீட்டு பயன்படுத்தப்படும்.