ஒரே ஒரு ஓட்டு- எதிர்காலத்தில் இந்த சின்னத்தில் போட்டியிடலாம்! அண்ணாமலை
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர் எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடலாம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதாவது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணும் பணி நடந்த நிலையில், குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது.
இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார், இவரது குடும்பத்தில் 5 பேர் இருந்தும் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என்பதால் சமூகவலைத்தளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் குறித்த பாஜக வேட்பாளர் கார்த்திக் எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.