‘அஜித்’ ஓட்டு போட வரமாட்டார்ப்பா... அதற்கு வேறு காரணம் இருக்கு? - போட்டுடைத்த டி.ஆர்
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், தியாகராயநகர் மண்டலத்திற்கு உட்பட்ட 117 வது வார்டில் இயக்குனர் டி.ராஜேந்தர் தனது வாக்கை பதிவு செய்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது -
நாடு இருக்கும் நிலைமையில், ஓட்டுப் போடலாமா, வேண்டாமா என்று மக்கள் குழம்பி வருகிறார்கள். மக்கள் கண்டிப்பாக நம்முடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நோட்டுகளை அள்ளி வீசி அரசியல்வாதிகள் மக்களிடையே ஓட்டுக்களை வாங்கி வருகிறார்கள்.
இந்த பண நோட்டுக்களை நம்பி மக்கள் வாக்களிக்க வேண்டாம். என் மகன் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக மும்பை சென்றுள்ளார். இதனால் அவரால் வாக்களிக்க வர முடியவில்லை. ஆனாலும், நான் என் மகனுக்கு போன் செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறினேன்.
அதுபோல நடிகர் அஜீத் அத்தனை தேர்தலில் வாக்களித்து வந்துள்ளார். ஆனால், தற்போது அவர் வராதாதற்கு காரணம் கொரோனா நோய் கூட காரணமாக இருக்கலாம். ஏன் பொங்கலன்று அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியாகவில்லை எல்லாத்துக்கும் இந்த நோய் மட்டுமே காரணம்.
இந்த நோயை வைத்து சினிமாக்காரர்களை பயமுறுத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சினிமாக்காரர்களை கண்டால் அரசியல்வாதிகளுக்கு ஒரு வித அச்சம் ஏற்படுகிறது. ஏன்னா.. நடிகர்களை ஒழித்துவிட்டு அரசியல் செய்து விடலாம் என்று யாரும் கருத வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.