கடனை வசூல் செய்ய சென்றவரை அடித்து விரட்டிய பாஜக நிர்வாகி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மருது. இவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார்.
அவரது மனைவி தனியார் மகளிர் சுய உதவிக் குழுவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் சுமார் மூன்று மாதகாலமாக ஏமாற்றி வந்துள்ளார்.
அந்தக் கடனை கேட்கச் சென்ற தனியார் சுய உதவி குழுவில் வேலை செய்யும் ஊழியரை மருது, 'என் மனைவியிடம் கடனைத் திரும்பத் தருமாறு கேட்பியா டா' என்று கூறி கடனை வசூலிக்க வந்த சுய உதவி குழுவின் ஊழியரை விரட்டி விரட்டி அடித்து தாக்கியுள்ளார்.
அடித்துவிட்டு 'பணத்தை திரும்பத் தர முடியாது உன்னால் முடிந்தால் எங்க வேணாலும் போய் சொல், என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது' என்று தகாத வார்த்தையால் திட்டி விரட்டி உள்ளார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.